admin
வல்லாபுரம்
வல்லாபுரம் சமஸ்கான் பள்ளிவாசல் சமஸ்கான் பள்ளிவாசல் என்பது பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஒரு பழமையான பள்ளிவாசல் ஆகும். பெரம்பலூர் நகருக்கு வடக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 45 அருகில் அமைந்துள்ளது. வரலாறு இந்தப் பள்ளிவாசலானது, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இந்தப் பள்ளிவாசல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் தொல்லியல் துறையால் பராமரிக்காமல் பாழடைந்துள்ளது. முழுவதும் கற்களை மட்டுமே … Read more
விசுவகுடி அணை
விசுவகுடி அணை – கல்லாறு நீர் தேக்கம் தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் ஊராட்சியில் 33 அடிவர்ரை நீர் தேக்கும் அளவில் கல்லாற்றின் குறுக்கே பச்சை மலைக்கும் செம்மலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்குமான சி’றந்த சுற்றுலா தளம்.
சாத்தனூர்
தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்: சாத்தனூர் கல் மரம் (Sattanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் உள்ளது. இவ்வூரில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இது 1940 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் கல்லாக … Read more
சிறுவாச்சூர்
அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவில் – சிறுவாச்சூர் தலவரலாறு சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் … Read more
செட்டிகுளம்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் – செட்டிகுளம் இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி இறைவி : காமாட்சியம்மன் தலவிருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம் தலவரலாற்றுச்சிறப்பு முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்ப வனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டுசோழமன்னன் ஆட்சி செய்த போது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து … Read more
இரஞ்சன்குடி
இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் .. 1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது … Read more
வாலிகண்டாபுரம்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம் கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் … Read more